கன்னட சின்னத்திரை நடிகை சௌஜன்யா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .
பெங்களூரு கும்பல்கோடு பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் தனது ஆண் நண்பர் விவேக்குடன் சௌஜன்யா வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று சௌஜன்யா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கபட்டார்.
தனது உடல்நிலை மற்றும் மனநிலை பாதிப்பால் வேறு வழியின்றி தற்கொலை செய்து கொள்வதாகவும் தன்னை பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் மன்னிக்க வேண்டும் என சௌஜன்யா கடிதம் எழுதி வைத்துள்ளார். இதனிடையே சௌஜன்யாவின் செல்போன் மாயமாகியுள்ளதாக போலீசில் புகார் தெரிவித்துள்ள பெற்றோர், தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.