நாளை வெளியாக உள்ள ருத்ர தாண்டவம் திரைப்படத்திற்கு தடை விதிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் மறுத்துவிட்டது. அந்த திரைப்படத்தில் கிறிஸ்தவர்களை தவறாக சித்தரிக்கும் வகையில் காட்சிகள் உள்ளதாக கூறி சாம் யேசுதாஸ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
சர்ச்சைக்குறிய காட்சிகளை நீக்கும் வரை திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். படத்தின் டிரைலர் மட்டுமே வெளிவந்துள்ள நிலையில், மனுதரார் கருத்து யூகத்தின் அடிப்படையில் உள்ளது எனவும், கடைசி நேரத்தில் இந்த மனு தாக்கல் செய்யபட்டுள்ளதால் படத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.