தெலங்கானா மாநிலம் மஞ்சிரியளா மாவட்டத்தில் துணிக்கடை திறப்பு விழாவிற்காக வந்த நடிகை கீர்த்தி சுரேஷை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.
அவருக்கு மேளதாளங்களுடன் வரவேற்பு அளிக்கப்பட்டதால் அப்பகுதியே திருவிழா போல் காட்சியளித்தது. இந்நிலையில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் அவரை காண ரசிகர்கள் அதிகளவில் கூடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.