திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் ரஜினிகாந்தின் மகள்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், செளந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் அவரது கணவர் விஷாகன், அவர்களது மகனும், ரஜினியின் பேரனுமான வேத் கிருஷ்ணா ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.