தனது தந்தை நாகேஸ்வரராவ் பயன்படுத்திய பொருட்களை தாம் அணியும் போது அது முழு திருப்தியை கொடுப்பதாக, நடிகர் நாகர்ஜூனா உருக்கத்துடன் கூறியுள்ளார்.
மறைந்த முன்னணி நடிகர் அக்கினேனி நாகேஸ்வர ராவின் 98ஆவது பிறந்தநாளையொட்டி, அவரது மகன் நடிகர் நாகர்ஜுனா வெளியிட்டுள்ள வீடியோவில், தனது தந்தைக்கு பிடித்த பஞ்சகட்டு பாரம்பரிய வேஷ்டியை அணிந்திருப்பதாகவும், அத்தோடு, தந்தையின் அபிமானமான நவரத்னா செயின், மோதிரம் ஆகியவற்றையும் அணிந்துள்ளதாகவும் கூறினார்.
தந்தை பயன்படுத்திய பொருட்களை அணியும் போது திருப்தி அடைவதாக உருக்கத்துடன் கூறிய நடிகர் நாகர்ஜுனா, தாம் புதிதாக நடிக்கவிருக்கும் பங்கர்ராஜு படத்தில் தந்தையின் ஸ்டைலில் நடிக்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.