சென்னையில், முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகி திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்ட போது, தனது ஒன்பிளஸ் செல்போன் காணாமல் போய்விட்டதாக, நடிகர் விமல் போலீசில் புகாரளித்துள்ளார்.
கடந்த 12-ம் தேதி பனையூரில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, செல்போனை இருக்கையில் வைத்து விட்டு ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டிருந்ததாகவும், பின்னர் பார்க்கையில் செல்போன் அந்த இடத்தில் காணவில்லை எனவும் விமல் கூறியுள்ளார்.