ரசிகர்கள் சிலர் நடுரோட்டில் ஆட்டை வெட்டி அண்ணாத்த பட போஸ்டருக்கு கொடூரமாக ரத்த அபிஷேகம் செய்தது தொடர்பாக, நடிகர் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
அந்த புகாரில், பொது இடத்தில் இதுபோன்று காட்டுமிராண்டித்தனமாக அரங்கேறிய செயலுக்கு, நடிகர் ரஜினிகாந்த் இதுவரை எதிர்ப்போ, கணடமோ, விளக்கமோ கொடுக்கவில்லை எனவும், இது அந்த செயலை ரஜினிகாந்த் ஆதரிப்பது போல் இருக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது மக்களுக்கு அச்சத்தையும், அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்ட நபர்கள் மீதும், நடிகர் ரஜினிகாந்த் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.