காவல்துறையினர் தன்னை சித்திரவதை செய்து தற்கொலைக்கு தூண்டுவதாக நடிகை மீரா மிதுன் நீதிபதியிடம் முறையிட்டுள்ளார்.
பட்டியலினத்தவர்களை இழிவாக பேசியதாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை மீரா மிதுன் மீது, மேலும் இரண்டு வழக்குகளில் தனித்தனியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த எழும்பூர் போலீசார், அவரை கைது செய்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்த இரண்டு வழக்குகளிலும் மீரா மிதுனுக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி, 10ஆயிரம் ரூபாய் பிணைத் தொகை செலுத்த உத்தரவிடடனர். முன்னதாக, தன் மீது பொய் வழக்கு பதிவு செய்து, போலீசார் தன்னை சித்திரவதை செய்வதாகவும், தற்கொலைக்கு தூண்டுவதாகவும் மீரா மிதுன் நீதிபதியிடம் குற்றம்சாட்டினார். இந்த இரண்டு வழக்குகளில் கைது செய்வது குறித்து தனக்கோ, தனது வழக்கறிஞருக்கோ போலீசார் தகவல் தெரிவிக்கவில்லை எனவும் மீரா மிதுன் கூறினார்.