பிளாக் விடோவ் பட வெளியீட்டில் ஒப்பந்தத்தை மீறியதாக டிஸ்னி பிளஸ் மீது நடிகை ஸ்கார்லெட் ஜோஹான்சன் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இவரது நடிப்பில் பிளாக் விடோவ் திரைப்படம் ஒரே நேரத்தில் திரையரங்குகளிலும் டிஸ்னி பிளஸ் ஓடிடி தளத்திலும் வெளியானது. இதன் மூலம் தற்போது வரை 318 மில்லியன் அமெரிக்க டாலர் வசூலானது.
இதற்கிடையே பிளாக் விடோவ் படத்தை திரையரங்குகளில் வெளியிட்டு அதன் மூலம் கிடைக்கும் வருவாயின் அடிப்படையில் தனக்கு ஊதியம் முடிவு செய்யப்பட்டதாகவும், ஆனால் அதற்கு மாறாக டிஸ்னி பிளஸ் ஓடிடியில் வெளியிட்டதால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி ஜோஹான்சன் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஆனால் கூடுதல் இழப்பீட்டுடன் ஜோஹன்சனுக்கு தற்போது வரை 20 மில்லியன் டாலர் கொடுக்கப்பட்டுள்ளதாக டிஸ்னி விளக்கம் அளித்துள்ளது.