சார்பட்டா படத்தில் எம்ஜிஆர் பற்றி தவறாக சித்தரித்த காட்சியை நீக்கவில்லை என்றால் கடல் கொந்தளிக்கும் என எம்ஜிஆர் ரசிகர் ஒருவர் ஆவேசமாக கூறினார்.
சார்பட்டா படத்தில் வரும் மஞ்சக் கண்ணன் கதாபாத்திரம் போல, எம்ஜிஆர் வேடமிட்ட விஸ்வநாதன் என்பவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகம் வந்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.
இயக்குனர் பா. ரஞ்சித் வீட்டு முன்பு போராட்டம் நடத்துவதற்கு அனுமதி வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தார். இது குறித்து பேசிய அவர், தான் சார்பட்டா படத்தை பார்க்கவில்லை என்றும், எம்ஜிஆர் படத்தை தவிர எந்த படத்தையும் பார்ப்பதில்லை என்றும் தெரிவித்தார்.