செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சினிமா

தனி நீதிபதியின் தீர்ப்பு நகல் இல்லாமலேயே விஜயின் மேல்முறையீட்டை விசாரணைக்கு பட்டியலிட உயர்நீதிமன்றம் அனுமதி

Jul 22, 2021 01:45:26 PM

வெளிநாட்டு சொகுசு காருக்கு நுழைவு வரி, அபராதம் ஆகியவற்றைப் பெறத் தடை கோரியும், உத்தரவு நகல் இல்லாமல் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கோரியும் நடிகர் விஜய் தொடுத்த மேல்முறையீட்டுக்கு வழக்கு எண் வழங்கப் பதிவுத்துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஜய் 2012ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரைப் பதிவு செய்ய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை அணுகிய போது, நுழைவு வரி செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து விஜய் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம், நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும் என்றும், அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது எனக் கருத்து தெரிவித்திருந்தார். விஜய்க்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அதை முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் வழங்க உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து விஜய் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், அபராதத்தை ரத்து செய்யவும், தன்னைப் பற்றித் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள விமர்சனங்களை நீக்கவும் கோரியுள்ளார். தனி நீதிபதியின் தீர்ப்பு நகல் இல்லாமல், மேல்முறையீட்டு மனுவை எண்ணிட்டு விசாரணைக்குப் பட்டியலிடப் பதிவுத்துறைக்கு உத்தரவிடக் கோரியும் கூடுதல் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, ஹேமலதா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, அபராதத்தைக் கட்டிவிட்டு ஜூலை 28ஆம் நாள் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளதால் மேல்முறையீட்டு மனுவை வரும் திங்கட் கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என விஜயின் வழக்கறிஞர் கோரினார்.

இதனையடுத்து மேல்முறையீடு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அரசு தரப்புக்கு வழங்க விஜய்க்கு உத்தரவிட்டனர். தனி நீதிபதி உத்தரவு நகல் இல்லாமல் வழக்கை எண்ணிட்டு விசாரணைக்குப் பட்டியலிடப் பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனர். வழக்கு எண்ணிட்ட பிறகு விசாரணைக்குப் பட்டியலிடப்படும் என்றும் தெரிவித்தனர்.


Advertisement
சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என நீதிமன்றத்தில் தனுஷ் - ஐஸ்வர்யா உறுதி..
இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வணங்கான் படம் பொங்கலுக்கு ரிலீஸ்
திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் சூரி
நடிகர் தனுசுக்கு கடிதம் எழுதியுள்ள நயன்தாராவுக்கு திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.எஸ்.குமரன் கேள்வி
தனுசுக்கு என் மீது தனிப்பட்ட வெறுப்பு.. 3 நொடி வீடியோவுக்கு ரூ.10கோடி கேட்கிறார் தனுஷ் - நயன்தாரா
திராவிடம், தமிழ் தேசியம் இரண்டும் 2 கண்கள் அல்ல - சரத்குமார்
நடிகர் டெல்லி கணேஷ் (வயது 80) உடல்நலக்குறைவால் காலமானார்
உலகநாயகனுக்கு இன்று 70வது பிறந்தநாள்..
கேரள ரசிகர்களிடம் மண்டியிட்டு அன்பை வெளிப்படுத்திய சூர்யா.!
பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த "கருப்பி" என்ற பெண் சிப்பிபாறை நாய் பேருந்து மோதி உயிரிழப்பு.!

Advertisement
Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..

Posted Nov 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி

Posted Nov 20, 2024 in உலகம்,Big Stories,

அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..

Posted Nov 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!


Advertisement