சென்னையில் மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக துணை நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு குப்பை கதை படத்தில் நடித்துள்ள விருகம்பாக்கம் தங்கதுரையின் மனைவி ஜெயலட்சுமி, நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஜெயலட்சுமியின் மரணத்துக்கு அவரது கணவர் தங்கத்துரைதான் காரணம் என அப்பெண்ணின் சித்தப்பா, விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதில், தங்கதுரைக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும், இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். புகாரின் பேரில் தங்கதுரையை விருகம்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.