நடிகர் விஜயின் 66 வது படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி படிபல்லி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வரும், தனது 65 வது படத்தின் முதல் கட்டப்படப்படிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்த நிலையில், கதாநாயகி பூஜா ஹெக்டே கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் அந்த படம் நிறைவடைந்தவுடன், தோழா பட இயக்குநர் வம்சி படிபல்லி இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளார். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.