கொரோனா பரிசோதனை எடுத்து ஒரு வாரம் ஆகியும் இன்னும் ரிசல்ட் வரவில்லை என நடிகை பியா ட்விட்டரில் புகார் தெரிவித்துள்ளார்.
ஏகன், கோவா, கோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை பியாவின் சகோதரர் கடந்த வாரம் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அவரது இழப்பை தொடர்ந்து, நடிகை பியா உட்பட அவரது குடும்பத்தில் அனைவரும் கடந்த 7-ம் தேதி கொரோனா பரிசோதனை எடுத்துள்ளனர்.
ஆனால், ஒரு வாரம் ஆகியும், அதற்கான முடிவுகள் இன்னும் வரவில்லை என நடிகை பியா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.