நடிகர் யோகி பாபு நடித்த மண்டேலா திரைப்படத்தை மறு தணிக்கை செய்ய உத்தரவிடக்கோரி தமிழ்நாடு முடி திருத்துவோர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இப்படத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களை இழிவுபடுத்தும் விதமான காட்சிகள் இடம் பெற்றுள்ளதகாவும், மருத்துவர் சமுதாய மக்களின் மனதை புண்படுத்தும் வகையிலும் காட்சிகள் உள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்க படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.