கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் மாதவன் குணமடைந்து பூரண நலத்துடன் இருப்பதாக அறிவித்துள்ளார்.
கடந்த மாதம் 25-ம் தேதி நடிகர் மாதவனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து, 14 நாட்கள் வீட்டிலேயே தனிமைபடுத்தலில் இருந்த நடிகர் மாதவன், குணமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அனைவருடைய அக்கறைக்கும், பிரார்த்தனைக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் தாம் உட்பட குடும்பத்தில் அனைவரும் பூரண நலத்துடன் இருப்பதாகவும் கூறியுள்ள மாதவன் தொற்று பாதிப்பை கடந்து வந்தாலும், அனைவரும் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.