இந்தி திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான ஜாவித் அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கில், பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்துக்கு மும்பை பெருநகர நீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது.
இந்த அவதூறு வழக்கு தொடர்பாக நடந்த விசாரணையில் நேரில் ஆஜராகாததை தொடர்ந்து கங்கனாவுக்கு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. விசாரணை வரும் 26 ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், வாரண்டை எதிர்த்து உயர் நீதிமன்றத்தை நாட உள்ளதாக கங்கனாவின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
இந்தி நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தொடர்பான டிவி நிகழ்ச்சி ஒன்றில், கங்கனா ரணாவத் தம் மீது அவதூறு கருத்துக்களை கூறினார் என்பது ஜாவித் அக்தரின் குற்றச்சாட்டு.