மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ள நிலையில் திரையரங்க உரிமையாளர்களுக்கு அப்படத்தின் தயாரிப்பாளர் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
திரையரங்கில் வெளியாகி 15 நாட்களிலேயே மாஸ்டர் திரைப்படம் அமேசானில் வெளியாகியுள்ளது. படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும்போது ஓடிடி தளத்தில் வெளியானால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் 3-வது வார திரையரங்கு வசூலை திரையரங்கு உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும் பிரித்துக் எடுத்துக் கொள்ள தயாரிப்பு நிறுவனம் சம்மதித்துள்ளது. ஆனால் வசூல் தொகை எவ்வளவு என்கிற விவரம் வெளியாகவில்லை.