கொரோனா பெரும்தொற்று காரணமாக ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமான 'நோ டைம் டு டை' இன் வெளியீடு மீண்டும் தாமதமாகிறது.
பிரபல ஜேம்ஸ்பாண்ட் பட வரிசையில் 25வது படமாக உருவாகியுள்ள படம் ”நோ டைம் டு டை”. டேனியல் கிரேக் நாயகனாக நடித்துள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை தள்ளிப் போன நிலையில், நடப்பாண்டு ஏப்ரல் 2ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டு அக்டோபர் 8ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்படுள்ளது.