இந்தி நடிகை கங்கனா ரணாவத்தின் ட்விட்டர் கணக்கிற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்து கடவுள்களை அவமதித்ததற்காக தாண்டவ் சீரிஸ் குழுவினரின் தலையை வெட்ட வேண்டிய நேரம் இது என நடிகை கங்கணா ரனாவத் ட்வீட் செய்திருந்தார்.
இதனை அடுத்து கங்கனா தொடர்ந்து ட்விட்டர் கணக்கை கையாள சில கட்டுப்பாடுகளை ட்விட்டர் நிறுவனம் விதித்துள்ளது. இது குறித்து கூறியுள்ள கங்கணா, தேசவிரோதிகளின் புகாரை ஏற்று தனது ட்விட்டர் கணக்கிற்கு கட்டுப்பாடு விதித்துள்ளதாகவும், விரைவில் தான் ட்விட்டரை விட்டே வெளியேற்றப்படலாம் என்றும் தெரிவித்துள்ளார்.