கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ராஜ மவுலியின் டிரிப்புள் ஆர் ((RRR)) படத்தின் இறுதி கட்டப் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை ஜனவரி 8ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டு படப்பிடிப்புகள் நடைபெற்று வந்தன. ஆனால் கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு தாமதமானது.
இந்நிலையில், கொரோனா குறைந்த நிலையில் தான் இயக்கி வரும் டிரிப்புள் ஆர் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக எஸ்.எஸ். ராஜமெளலி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.