காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உள்ள சனிபகவான் ஆலயத்தில் கே.ஜி.எப் சினிமா பட நாயகன் யாஷ் மற்றும் கர்நாடக துணை முதலமைச்சர் அஸ்வந் நாராயண் ஆகியோர் சனி பகவானை வழிபட்டனர்.
ஹெலிகாப்டர் மூலம் காரைக்கால் வந்த அவர்கள், சனிபகவான் ஆலயத்தில் நடந்த சிறப்பு அபிஷேக, ஆராதனைகளில் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் அஸ்வந் நாராயண், மேல் சபை துணை சபாநாயகர் தர்மே கவுடாவின் மர்மமான மரணம் குறித்து விசாரணை நடைபெறுவதாகவும், அதன் முடிவில் உண்மை வெளிவரும் என்றார்.