நடிகர் ரஜினிகாந்த் தனக்கு சிகிச்சை அளித்த அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
கடவுள் கருணையில் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு, மகிழ்ச்சியோடு இருப்பதாக குறிப்பிட்டுள்ள ரஜினிகாந்த், மருத்துவர்கள், ஊழியர்களின் சேவை மிகவும் சிறப்பானதாக இருந்ததாக பாராட்டியுள்ளார். இந்த சேவையை தொடர்ந்து தொடரும்படியும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.