பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரணுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மகதீரா, நாயக், எவடு, துருவா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ராம் சரண், பாகுபலி புகழ் இயக்குனர் ராஜமவுலி இயக்கும் புதிய படமான ஆர்ஆர்ஆர் படத்தில் 22ம் தேதி வரை நடித்தார்.
பின்னர் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியில் குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து கொண்டார். இதில் அல்லு அர்ஜூன், நிகரிகா கொனிடேலா, வருண் தேஜ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் டுவிட்டர் பக்கத்தில் இன்று காலை அவர் வெளியிட்டுள்ள பதிவில், தனக்கு கொரோனா உறுதியாகியிருப்பதாகவும், அறிகுறிகள் எதுவும் இல்லாததால் வீட்டிலேயே தனிமைபடுத்தி கொண்டதாகவும் கூறியுள்ளார்.