ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட இருப்பதாக அவருடைய அண்ணன் சத்யநாராயணா தெரிவித்துள்ளார்.
ரஜினி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும், இன்று மாலை டிஸ்சார்ஜ் ஆகி சென்னை திரும்ப இருப்பதாகவும் சத்யநாராயணா குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவர்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தி இருப்பதால், சென்னையில் வீட்டில் தங்கியிருந்து ரஜினிகாந்த் அடுத்த சில நாள்களுக்கு ஓய்வு எடுக்க இருப்பதாகவும் சத்யநாராயணா கூறியுள்ளார்.