திரைப்பட நட்சத்திரம் விஜயசாந்தி, காங்கிரசின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் ராஜினாமா செய்துள்ளார்.
ஏற்கனவே வெளியான தகவலின் படி நாளை அவர் பாஜகவில் சேருவார் என கூறப்படுகிறது. டெல்லியில் நடக்கும் நிகழ்ச்சியில் அவர் பாஜகவில் சேரும் முன்னர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
2014 ல் விஜயசாந்தி காங்கிரசில் சேர்ந்தார். 1998ல் பாஜகவில் சேர்ந்து அரசியல் வாழ்வைத் துவக்கிய அவர் தெலங்கானா ராஷ்டிரிய சமிதியிலும் இருந்துள்ளார்.