நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து உதவி பெற சென்னை போயஸ்கார்டனில் உள்ள அவரது வீட்டின் முன்பு காலை 9 மணியிலிருந்து திருச்சியை சேர்ந்த மாற்றுத் திறனாளி பெண் ஒருவர் காத்திருக்கிறார்.
திருச்சி அண்ணாநகர் எடமலபட்டிபுதூரை சேர்ந்த அப்பெண்ணின் பெயர் கவுரி ஆகும். வலதுகால் நடக்க முடியாத அவர், ரஜினியை நேரில் சந்தித்து உதவி பெற திருச்சியிலிருந்து வந்து அவருடைய வீட்டருகே தரையில் அமர்ந்துள்ளார்.
கையில் பணமில்லாததை கண்டு ரஜினி ரசிகர்கள் சிலர் உணவு வாங்கி கொடுக்க, அதை சாப்பிட்டுவிட்டு நம்பிக்கையுடன் ரஜினியை காண அப்பெண் காத்திருக்கிறார்.