போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான வழக்கில் நடிகர் அர்ஜுன் ராம்பாலிடம் விசாரணை தொடங்கியது.
நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தையடுத்து, பாலிவுட்டில் போதைப்பொருள் புழக்கம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 9ம் தேதி அர்ஜூன் ராம்பால் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதில் தடை செய்யப்பட்ட மாத்திரைகள் சிக்கின.
இதனையடுத்து விசாரணைக்கு ஆஜராக நேற்று முன்தினம் அர்ஜுன் ராம்பாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், இன்று மும்பையில் உள்ள போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரான அவரிடம், விசாரணை நடைபெற்று வருகிறது.
அவரது காதலி கேப்ரியல்லாவிடம் கடந்த 2 நாட்களாக விசாரணை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.