போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான வழக்கில் நடிகர் அர்ஜுன் ராம்பாலின் காதலி கேப்ரியல்லாவிடம் தொடர்ந்து 2வது நாளாக விசாரணை நடைபெற்றது.
நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தையடுத்து, பாலிவுட்டில் போதைப்பொருள் புழக்கம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் நடிகர் அர்ஜூன் ராம்பாலின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதில் தடை செய்யப்பட்ட மாத்திரை சிக்கியது.
இதனையடுத்து அவரது காதலி கேப்ரியல்லாவிடம் நேற்று விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று மும்பையில் உள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் 2வது நாளாக அவரிடம் விசாரணை நடைபெற்றது.
இதனிடையே, நடிகர் அர்ஜூன் ராம்பால் நாளை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.