திரைப்படங்களைத் திரையிடுவதற்கான கட்டணம் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக இயக்குநர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மிக அழுத்தமாகக் குரல் கொடுத்ததால், திரையரங்குகளில் திரைப்படத்தைத் திரையிடுவதற்கான விர்ச்சுவல் பிரின்ட் கட்டணத்தை நவம்பர் மாதத்துக்குத் தள்ளுபடி செய்வதாக கியூப், யுஎப்ஓ நிறுவனங்கள் அறிவித்துள்ளதாகத் தெரிவித்தார்.