தெலுங்கு திரைப்பட நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
65 வயதாகும் சிரஞ்சீவி, ஆச்சார்யா எனும் புதிய படத்தில் நடிக்கிறார். கொரோனா பரவலால் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் இருந்து தடைபட்டிருந்தது.
அந்த படப்பிடிப்புக்கு மீண்டும் செல்லும் முன்பு, சிரஞ்சீவி கொரோனா பரிசோதனை எடுத்துள்ளார். இதில் கொரோனா உறுதியாகியிருப்பதாக டுவிட்டரில் வெளியிட்ட பதிவு மூலம் சிரஞ்சீவி தெரியபடுத்தியுள்ளார்.
மேலும் அறிகுறிகள் எதுவும் இல்லாததால், வீட்டிலேயே தன்னை தானே சுயதனிமைபடுத்தி கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ள சிரஞ்சீவி, கடந்த 5 நாள்களாக தன்னுடன் தொடர்பிலிருந்தோரை பரிசோதனை எடுத்து கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார்.