பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யக்கோரி நடிகை சனம் ஷெட்டி தொடர்ந்த வழக்கில், 3 வாரத்திற்குள் பதிலளிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதோடு, சமூக வலைத்தளங்களில் தன்னை தரக்குறைவாக விமர்சித்ததாக தர்ஷன் மீது சனம் அளித்த புகாரில் அடையாறு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மேலும், தர்ஷன் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதியவும் சனம் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி, வழக்கு குறித்து 3 வாரத்திற்குள் பதில் அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு, தர்சன் மீது பதிவான வழக்கின் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.