கோவா கடற்கரையில் ஆபாச பட ஷூட்டிங்கில் ஈடுபட்டதாக நடிகை பூனம் பாண்டே கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த செப்டம்பரில் சாம் பாம்பே என்பவரை திருமணம் செய்த பூனம் பாண்டே, மறுநாளே தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி தாக்கியதாக கணவர் மீது புகார் அளித்தார். தெற்கு கோவாவின் கனகோனா கிராமத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பாக சாம் பாம்பே கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், அதேபகுதியில் பூனம் பாண்டே ஆபாசப் பட ஷூட்டிங் எடுத்ததாகவும், அதுதொடர்பான வீடியோ வைரலாகி வருவதாகவும் கோவா மாநிலக் கட்சி ஒன்றின் மகளிர் அணி புகார் அளித்திருந்தது. இதன் அடிப்படையில் பூனம் பாண்டே கைது செய்யப்பட்டுள்ளார்.