இந்தி நடிகை கங்கனா ரணாவத், அவருடைய சகோதரி ரங்கோலி சான்டல் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகுமாறு மும்பை போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர்.
சமூகவலைதள பதிவுகள் வாயிலாக மதரீதியில் இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்த முயற்சித்ததாக தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2 பேர் மீதும் வழக்குப்பதிய உத்தரவிட்டது.
இதன்பேரில் 2 பேர் மீதும் மும்பை போலீசார் கடந்த மாதம் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஏற்கெனவே சம்மன் அனுப்பிய நிலையில், 2 பேரும் நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து 10ம் தேதி நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு மீண்டும் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.