நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் நவம்பர் 12-ந் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. சூரரைப் போற்று திரைப்படத்தை இம்மாத இறுதியில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் விமானப்படை தரப்பில் இருந்து தடையில்லா சான்று கிடைக்க தாமதமானது. இதனால், படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில், படத்தின் ட்ரெய்லரை இன்று வெளியிட்டுள்ள படக்குழு, ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளது.