நடிகர் பிரித்விராஜூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 7 ஆம் தேதி முதல் ஜன கண மன என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் அவருக்கும், படத்தின் இயக்குநர் டிஜோ ஜோஸ் அந்தோணிக்கும் தொற்று உறுதியானதை பிரித்விராஜ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
தமக்கு வெளிப்படையான அறிகுறிகள் ஏதும் இல்லை என்றும் தம்முடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்வதுடன், கொரோனா சோதனை செய்து கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.