நடிகை வரலட்சுமி சரத்குமார் இயக்குநராக களமிறங்கும் கண்ணாமூச்சி படத்தின் first look ஐ ஒரே நேரத்தில் திமுக எம்.பி.கனிமொழி உட்பட 50 பெண் பிரபலங்கள் சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகை வரலட்சுமி சரத்குமார் இயக்குநராக அறிமுகமாகும் இந்தப் படத்தில் வரலட்சுமியே பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் - ஐ, திமுக எம்.பி. கனிமொழி உட்பட 50 அரசியல் மற்றும் திரையுலகை சார்ந்த பெண் பிரபலங்கள் ஒரே நேரத்தில் வெளியிட்டுள்ளனர்.
இதனை, தன்னுடைய டிவிட்டர் பக்கத்திலும் வரலட்சுமி சரத்குமார் பகிர்ந்துள்ளார். வரலட்சுமி இயக்குநராக அறிமுகமாகவுள்ளதை முன்னிட்டு, பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.