முன்னணி நடிகையான தமன்னா, கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீட்டுக்குச் சென்ற போது அவரது பெற்றோர்கள் கட்டியணைத்து வரவேற்றனர்.
முன்னணி நடிகையான தமன்னாவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்ற அவர், ஐதராபாத்தில் சில நாட்கள் தங்கி இருந்தார்.
இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்ட தமன்னா மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார். வீட்டிற்கு வரும் தமன்னாவை வாசலிலேயே வரவேற்று அவருடைய அப்பாவும், அம்மாவும் கட்டியணைத்து வரவேற்றார்கள். அவரது செல்ல நாயும், துள்ளிக்குதித்து அவரை வரவேற்றது.