அடுத்தடுத்து நடிக்கும் 2 ஆக்சன் திரைப்படங்களுக்காக தீவிர சண்டை பயிற்சியில் ஈடுபட்டு வரும் வீடியோவை நடிகை கங்கனா ரனாவத் வெளியிட்டுள்ளார்.
சர்வேஷ் மேவரா இயக்கும் தேஜஸ் திரைப்படத்தில் விமானப்படை விமானியாகவும், ரஸ்னீஷ் ராஸி காய் இயக்கும் தக்காட் படத்தில் உளவாளியாகவும் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார்.
இந்த நிலையில், மணிகர்னிகா திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு, பாலிவுட்டுக்கான முதல் அதிரடி ஹீரோயினை தான் கொடுத்துள்ளதாக ட்வீட் செய்துள்ள கங்கனா, பயிற்சியாளர் ஒருவருடன் சண்டை பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.