நடிகர் விஜய்யின் மாஸ்டர் படமும், கார்த்தியின் சுல்தானும் வரும் பொங்கலுக்கு ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாஸ்டர் படம் ஊரடங்கால் ரிலீஸ் செய்யப்பட முடியாமல் உள்ளது. ஓடிடி தளத்திலும் படத்தை வெளியிட படக்குழு விரும்பாததால், படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
இதேநோளில் கார்த்தியின் சுல்தான் திரைப்படத்தையும் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு தீபாவளியின் போது விஜயின் பிகில், கார்த்தியின் கைதி வெளியானது.