இரண்டாம் குத்து திரைப்படம் போன்ற ஆபாசங்கள் நிறைந்த, சமூக சீர்கேடுகளை விளைவிக்கும் படங்களை ஊக்குவிக்கக் கூடாது என இயக்குநர் பாரதிராஜா வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல கலைஞர்கள் தார்மீக பொறுப்புகளோடும், கண்ணியத்தோடும் கட்டியமைத்த சினிமா என்ற கூட்டை இன்று வியாபாரம் என்ற போர்வையில் சீரழிக்கிறோமோ என கவலை எழுவதாகவும், இதுபோன்ற ஆபாசங்களை வெளியிட அனுமதிக்க கூடாது என அரசையும், சென்சார் போர்டையும் வலியுறுத்துவதாகவும் கூறியுள்ளார்.
தற்போது நடக்கும் பலாத்காரங்களும், குழந்தை சிதைவுகளும் போதாதா? என கேள்வி எழுப்பியுள்ள அவர், இத்தகைய படங்களும், சித்தனையும் கழிவுகளை சாப்பாட்டு தட்டில் வைப்பது போன்று உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.