போதைப் பொருள் விவகார வழக்கில் இந்தி நடிகை ரியா சக்ரபர்த்திக்கு ஜாமீன் அளிக்கப்பட்டிருப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் மேல்முறையீடு செய்ய உள்ளனர்.
இந்தி நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையில், அவருக்கு காதலியும் நடிகையுமான ரியா, அவருடைய சகோதரர் சவிக் ஆகியோர் போதைப் பொருள் வாங்கி கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த மாதம் கைது செய்யப்பட்ட ரியாவுக்கு மும்பை உயர்நீதிமன்றம் இன்று 9 நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது. இதனை எதிர்த்தே என்சிபி உச்சநீதிமன்றம் செல்ல உள்ளது.