உலக சினிமா ரசிகர்களை பெரும் எதிர்பார்ப்பில் ஆழ்த்திய ஜேம்ஸ் பாண்ட் படமான No Time To Die வெளியாவது மீண்டும் தள்ளிப் போக இருப்பதாக படத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் வெளியாக வேண்டிய இந்தப் படம் நவம்பர் மாதம் வரை தள்ளிப் போனது.
ஆனாலும் பெருந்தொற்றின் பாதிப்பு குறையாததால் தற்போது அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் No Time To Die படம் திரைக்கு வரும் என படத்தயாரிப்பு நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் 25வது படமான No Time To Die படத்தின் டிரெய்லர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.
200 மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் தற்போது வரை 243 மில்லியன் டாலர் அளவுக்கு வருவாயை ஈட்டித் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.