போதைப்பொருள் வழக்கில் தாம் தவறுதலாக தொடர்புபடுத்தப் பட்டுவிட்டதாக கூறியுள்ள கன்னட நடிகை அனுஸ்ரீ, தம்மிடம் விசாரணை நடத்தியது மிகுந்த மன வேதனை அளிப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
கன்னட திரையுலகை உலுக்கி வரும் போதை பொருள் பயன்பாடு தொடர்பான வழக்கில், நடிகை அனுஸ்ரீயிடம் கடந்த மாதம் 24-ம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், அனுஸ்ரீ வெளியிட்டுள்ள வீடியோவில், தன்னுடைய பிரபலமே, தன் வாழ்க்கைக்கு முள்ளாக இருக்கும் என கருதவில்லை என்றும், விசாரணைக்காக ஆஜரான தன்னை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் சித்தரித்த விதம் மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.