செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கதையை திருடி பிரமாண்ட படம் ஷங்கரை துரத்தும் வழக்கு.! உச்ச நீதிமன்றத்தில் எந்திரன்

Oct 01, 2020 07:34:23 AM

கடந்த 10 வருடங்களாக இயக்குனர் ஷங்கரைத் துரத்தி வரும் எந்திரன் பட கதை திருட்டு வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்திற்கு சென்றுள்ளது. தன்மீதான கதை திருட்டு வழக்கை விசாரிக்க தடை விதிக்கக் கோரி இயக்குனர் ஷங்கர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.

இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான எந்திரன் படத்தின் கதை தன்னுடையது என்று எழுத்தாளர் அரூர் தமிழ்நாடன் என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.

வார இதழ் ஒன்றில் தான் எழுதிய ஜூகிபா என்ற தொடர் கதையை திருடியதாகவும், சினிமாவுக்கு ஏற்ற காட்சி அமைப்பு மற்றும் பாடல் காட்சிகளைச் சேர்த்து எந்திரன் என்ற பெயரில் படம் எடுத்துள்ளார் என்றும் அதைவைத்து பல கோடி லாபம் சந்தித்த கலாநிதிமாறன் தனக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு தரவேண்டும் என கேட்டு இருவருக்கும் எதிராக 2010 ஆம் ஆண்டு எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கை தள்ளுபடி செய்யகோரி இயக்குனர் ஷங்கர் மற்றும் தயாரிப்பாளர் கலாநிதிமாறன் வழக்குத் தொடர்ந்தனர். அவர்களது மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து , கதை திருட்டு வழக்கை விசாரிக்க தடை விதிக்க கோரி ஷங்கர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அப்போதும் எழுத்தாளர் அரூர் தமிழ்நாடன், ஷங்கர் தனது கதையை திருடியதாக எதிர் மனு தாக்கல் செய்தார். வருடங்கள் பல கடந்த நிலையில் கடந்த ஆண்டு ஷங்கருக்கு எதிரான கதை திருட்டு வழக்கிற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

இந்த நிலையில், கதைத் திருட்டு வழக்கை விசாரிக்கத் தடை விதிக்கக் கோரி ஷங்கர் தற்போது உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். துணிச்சலுடன் வருடக்கணக்கில் வழக்கு நடத்தும் எழுத்தாளர் அரூர் தமிழ்நாடனுக்கு எப்போது நியாயம் கிடைக்கும் என்பது சக எழுத்தாளர்களின் ஆதங்கமாக உள்ளது.


Advertisement
நடிகர் டெல்லி கணேஷ் (வயது 80) உடல்நலக்குறைவால் காலமானார்
உலகநாயகனுக்கு இன்று 70வது பிறந்தநாள்..
கேரள ரசிகர்களிடம் மண்டியிட்டு அன்பை வெளிப்படுத்திய சூர்யா.!
பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த "கருப்பி" என்ற பெண் சிப்பிபாறை நாய் பேருந்து மோதி உயிரிழப்பு.!
அமரன் திரைப்பட குழுவினருக்கு அண்ணாமலை பாராட்டு
கூலி படப்பிடிப்பு தொடங்கும் முன் சிகிச்சை குறித்து ரஜினி கூறினார் - லோகேஷ்
குரங்குப் பெடல் படத்தின் இயக்குனருக்கு புதுச்சேரி அரசு விருது, பரிசு..!
நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி
இந்திய திரைப்பட அகாடமி விருது விழா.. இந்திய சினிமாவில் சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் நானிக்கும், சிறந்த பெண் விருதை சமந்தாவிற்கும் கொடுக்கப்பட்டது
ஆஸ்கார் விருதிற்கு இந்தியா சார்பில் அனுப்ப லாபதா லேடிஸ் திரைப்படம் பரிந்துரை

Advertisement
Posted Nov 15, 2024 in சென்னை,Big Stories,

எலிக்கு வைத்த மருந்து.. இரு குழந்தைகள் பலி.. பெஸ்ட் கண்ட்ரோல் செய்தது சரியா? வங்கி மேலாளார் வீட்டில் நடந்தது என்ன ?

Posted Nov 14, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒற்றை மனிதனும் 100 ஏக்கர் காடும் 1 லட்சம் அரிய வகை மரங்கள் 240 பறவை இனங்களின் வாழ்விடம்

Posted Nov 14, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

“எங்க அம்மாவுக்கு சரியாக ட்ரீட்மெண்ட் கொடுக்கலை அதான் கத்தியால குத்தினேன்”..! கலக்கத்தில் அரசு மருத்துவர்கள்

Posted Nov 13, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சன்னியாச வாழ்க்கையில் இருந்து சம்சார வாழ்க்கைக்கு திரும்பிய ஆதீனத்தை விரட்டிய மக்கள்..! சூரியனார்கோயில் மடத்துக்கு பூட்டு..

Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மாணவிகளுக்கு பாலியல் கொடுமை.. பள்ளி நிர்வாகிகளுக்கு நெஞ்சுவலியாம்.. மருத்துவமனையில் படுத்துக் கொண்டனர்..! போக்சோவில் கைதானவர்கள் “லைவ் ஆக்டிங்”


Advertisement