பிக்பாஸ்-3 நிகழ்ச்சியில் பங்கேற்று ஓராண்டாகியும் தனக்கான சம்பளம் வழங்கப்படவில்லை என நடிகை கஸ்தூரி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதே ஆதரவற்ற குழந்தைகளின் அறுவை சிகிச்சை செலவுக்காக தான் என கூறியுள்ளார். மேலும் எப்போதுமே பொய்யான வாக்குறுதிகளை தான் நம்புவதில்லை எனக் கூறியுள்ள கஸ்தூரி, இந்த விஷயத்தில் இப்படி நடக்கும் என தான் எதிர்பார்க்கவே இல்லை என்றும் பதிவிட்டுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் வரும் 4ம் தேதி முதல் ஆரம்பமாகும் நிலையில், கஸ்தூரி இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
class="twitter-tweet">No words to thank @vijaytelevision who have withheld my payment for over a year.
நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில கலந்துக்கிட்டதே manumission குழந்தைகளோட ஆப்பரேஷன் செலவுக்காகத்தான். I never believed any of your fake promises, but even I didnt expect this.