நடிகை கூறிய பாலியல் பலாத்கார வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராகும்படி திரைப்பட இயக்குனரும், நடிகருமான அனுராக் காஷ்யப்புக்கு மும்பை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
அனுராக் தன்னை பலாத்காரம் செய்ததாக இந்தி நடிகை பாயல் கோஷ், அளித்த புகாரின்பேரில் வெர்சோவா காவல்நிலையத்தில் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் கடந்த வாரம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், வெர்சோவா காவல்நிலையத்தில் நாளை காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி அனுராக்குக்கு மும்பை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.