நடிகை பாயல் கோஷ் அளித்த புகாரின்பேரில் இந்தி திரைப்பட இயக்குநர் அனுராக் காஷ்யப் மீது மும்பை போலீசார் பாலியல் பலாத்கார (rape) வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
2013ம் ஆண்டு தன்னிடம் பாலியல் ரீதியில் அனுராக் அத்துமீறியதாக பாயல் அண்மையில் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில் மும்பை வெர்சோவா காவல்நிலையத்தில் (Versova police station) கடந்த 2013ம் ஆண்டு யாரி ரோடு எனும் பகுதியில் வைத்து நடிகையை பாலியல் வன்கொடுமை செய்ததாக அனுராக் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அனுராக்கை விசாரணைக்கு அழைக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.