திரைப்பட தயாரிப்பு நிறுவன கட்டிடத்தின் ஒருபகுதியை மாநகராட்சி இடித்தது தொடர்பான வழக்கில் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தின் பெயரை சேர்க்க இந்தி நடிகை கங்கனா ரணாவத்துக்கு மும்பை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
மும்பையிலுள்ள தனது திரைப்பட நிறுவன கட்டிடத்தின் ஒருபகுதியை மாநகராட்சி இடித்ததை சட்டவிரோதமாக அறிவிக்கக்கோரியும், மாநகராட்சியிடம் இருந்து 2 கோடி ரூபாய் இழப்பீடு கோரியும் கங்கனா மனு தாக்கல் செய்திருந்தார்.
அதன் மீது நேற்று விசாரணை நடைபெற்றபோது கங்கனாவுக்கு மிரட்டல் விடுப்பது போன்று ராவத் பேசிய டிவிடி தாக்கல் செய்யப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதிகள், சஞ்சய் ராவத்தையும், மும்பை மாநகராட்சி அதிகாரியையும் வழக்கில் சேர்க்க கங்கனாவுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டனர்.