நடிகர் சுசாந்த் ராஜ்புத் மரணம் தொடர்பான வழக்கில் போதை மருந்து வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட நடிகை ரியா சக்ரபோர்த்தியின் நீதிமன்ற காவல் வரும் 6 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
போதை மருந்து வழக்கில் நடிகை ரியா கடந்த 9 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். போதை மருந்து கும்பலின் முக்கிய கண்ணி என அவரை போதை தடுப்புப் பிரிவு கூறியுள்ளது.
அவரிடம் 3 நாட்கள் கேட்கப்பட்ட கேள்விகளை தொடர்ந்து பாலிவுட்டில் தனது விசாரணையை போதை தடுப்புப் பிரிவு விரிவுபடுத்தி உள்ளது.
இதனிடையே ஜாமின் கேட்டு ரியா சகரபோர்த்தியும் அவரது சகோதர ரும் தாக்கல் செய்த மனு மும்பை உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.